சந்தேகநபர்கள் தொடர்பில் உரிய தகவல்கள் வழங்குவோருக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 1, 2022

சந்தேகநபர்கள் தொடர்பில் உரிய தகவல்கள் வழங்குவோருக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம்

பாணந்துறையில் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரின் இருப்பிடம் தொடர்பில் உரிய தகவல்களை வழங்குவோருக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 சந்தேக நபர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அருகில் அம்புயூலன்ஸ் வண்டியின் சாரதி மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் தனிப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் இருவரை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.

இரண்டு சந்தேக நபர்களின் இருப்பிடத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளதுடன், இது தொடர்பாக ரொக்கப் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 071 8592686 அல்லது 071 8592745 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment