பொது ஆவணம் தொடர்பில் நாளை அரசியல் குழுவில் இறுதி முடிவு : தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 5, 2022

பொது ஆவணம் தொடர்பில் நாளை அரசியல் குழுவில் இறுதி முடிவு : தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு தீர்மானம்

13ம் திருத்தம் என அறியப்படும், இலங்கை அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு அதிகார பரவலாக்கல் சட்டத்தை முழுமையாக அமுலாக்க உரிய அறிவுறுத்தல்களை, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரதான தரப்பு என்ற முறையில், இலங்கை அரசுக்கு கொடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் சார்பாக எழுதப்பட உள்ள பொது ஆவணக் கடிதம் தொடர்பாக, நவம்பர் 2ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “திண்ணை கலந்துரையாடல்” முதல் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற கலந்துரையாடல்களில் முன்வைக்கப்பட்ட பல்வேறு வரைபுகளின் உள்ளடக்கங்கள் தொடர்பாகவும், அவை தொடர்பில் முன்வைக்கப்பட்ட வாதபிரதிவாதங்கள் தொடர்பாகவும், இன்று மாலை மெய்நிகர் கலந்துரையாடல் மூலம் ஆலோசித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு, நாளை அரசியல் குழுவை கூட்டி இது தொடர்பில் இறுதி முடிவை எடுப்பது என தீர்மானித்தது.

இன்றைய மெய்நிகர் கலந்துரையாடலில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதகிருஷ்ணன் ஆகியோர் உள்ளிட்ட தலைமைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.

No comments:

Post a Comment