நிதி அமைச்சரின் முயற்சியை தொடர்ந்து, தனியார் துறையினருக்கும் சம்பள உயர்வு ! அறிவித்தது மல்டிலாக் மற்றும் மேக்டைல்ஸ் குழுமம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 4, 2022

நிதி அமைச்சரின் முயற்சியை தொடர்ந்து, தனியார் துறையினருக்கும் சம்பள உயர்வு ! அறிவித்தது மல்டிலாக் மற்றும் மேக்டைல்ஸ் குழுமம்

சில்மியா யூசுப்

மல்டிலாக் மற்றும் மேக்டைல்ஸ் குழுமம் (Macksons, Manufacturer’s of Multilac, Macktiles and a building materials conglomerate)இணைந்து தமது ஊழியர்களுக்கு 5,000 ரூபா சம்பள உயர்வினை வழங்க தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சரின் முயற்சியை தொடர்ந்து, தமது ஒட்டு மொத்த பணியாளர்களுக்கும் குறைந்தபட்சம் 5,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என Multilac, Macktiles மற்றும் கட்டுமானப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் உற்பத்தியாளர்கள் இன்று செவ்வாய்கிழமை அறிவித்தனர்.

இம்மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் மாதாந்திர கொடுப்பனவாக 5000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ செய்தியாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டார்.

ஓய்வூதியம் பெறுபவர்களும் இம்மாதத்திலிருந்து ஒரு வருட காலத்திற்கு 5000 ரூபா, அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு என்று கூறினார். 

அதனை தொடர்ந்து மல்டிலாக் மற்றும் மேக்டைல்ஸ் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி Shimmer Milfer (ஷிம்மர் மில்ஃபர்) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, 'இது ஒரு கடினமான நேரமாக இருந்த போதிலும், எங்கள் ஊழியர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது ஒவ்வொரு முதலாளியின் பொறுப்பாகும்.’

எனவே மல்டிலாக் மற்றும் மேக்டைல்ஸ் குழுவின், முழு பணியாளர்களது சம்பளம் ஜனவரி 2022 முதல் பின்வருமாறு அதிகரிக்கிறது.

ரூபா 35,000 க்கு கீழே : 15%
ரூபா 50,000 க்கு கீழே : 10%
ரூபா 100,000 க்கு கீழே : 6%
ரூபா 150,000 க்கு மேல் : 4%

No comments:

Post a Comment