பானுக ராஜபக்‌ஷ ஓய்வு பெறுவதாக அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 5, 2022

பானுக ராஜபக்‌ஷ ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் பானுக ராஜபக்‌ஷ தாம் ஓய்வு பெறுவதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

புதிய முறைமையிலான உடற்தகுதிகாண் சோதனைகள் தொடர்பில் உள்ள பிரச்சினை காரணமாக அவர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் தனது இலங்கை கிரிக்கெட்டிலிருந்து விலகும் தனது இராஜினாமா கடிதத்தை பானுக ராஜபக்‌ஷ கையளித்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அதற்கமைய, உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் தேசிய அணியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

தான் ஒரு விளையாட்டு வீரராகவும், கணவராகவும் தனது பொறுப்புகளை தான் மிகவும் கவனமாக பரிசீலித்து, ஒரு தந்தையாக மற்றும் தன்னுடன் தொடர்புடைய குடும்ப உறவுகளை கருத்திற் கொண்டு இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக பானுக ராஜபக்‌ஷ குறித்த இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேச ஒரு நாள் மற்றும், ரி20 அணிகளில் பானுக ராஜபக்‌ஷ இடம்பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment