பண நோட்டுக்கள் அச்சிடுவதை நிறுத்த இலங்கை மத்திய வங்கி திட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 10, 2022

பண நோட்டுக்கள் அச்சிடுவதை நிறுத்த இலங்கை மத்திய வங்கி திட்டம்

(எம்.எப்.எம்.பஸீர்)

தொடர்ந்தும் பண நோட்டுக்களை அச்சிடுவதை நிறுத்திக் கொள்ள இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது. பண நோட்டுக்களை அச்சிடுவதற்கு பதிலாக, தேவையான பணத்தை நிதிச் சந்தையிலிருந்து பெற மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.

அதன்படி, அடுத்து வரும் ஒரு மாதத்துக்குள், வங்கி வட்டி வீதங்கள் உயர்வடையலாம் என மத்திய வங்கியின் உள்ளக தகவல்கள் தெரிவித்தன.

தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் காலத்தில் மட்டும், சுமார் 1.3 ட்ரில்லியன் ரூபா பணம் புதிதாக அச்சிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வாறு பணம் வரையறை இன்றி அச்சிடப்பட்டதால் நாட்டில் பண வீக்கம் அதிகரித்துள்ளதாகவும் பல தரப்புக்களும் குற்றம் சாட்டி வரும் நிலையிலேயே, மத்திய வங்கி புதிதாக பண நோட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்த நிவாரண திட்டங்களை நடைமுறைப்படுத்த, சுமார் 230 பில்லியன் ரூபா வரை தேவைப்படும் நிலையில், அந்நிதியில் ஒரு பகுதியை உள்நாட்டு நிதிச் சந்தையிலிருந்து பூர்த்தி செய்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment