இலங்கை வந்துள்ள சிம்பாப்வே அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Monday, January 10, 2022

இலங்கை வந்துள்ள சிம்பாப்வே அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கு கொரோனா

இலங்கை வந்துள்ள சிம்பாப்வே அணியின் தலைமைப் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக சிம்பாப்வே அணியினர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

இலங்கை வந்தடைந்த சிம்பாப்வே வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் ஆகியோருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போதே சிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் லால்சந்த் ராஜ்புதை அணியில் இருந்து பிரித்து தனிமைப்படுத்தலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அணியின் ஏனைய வீரர்கள் மற்றும் பிற ஊழியர்களின் பி.சி.ஆர். சோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளன.

No comments:

Post a Comment