நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போது அதன் மூலமே அழிந்து வருவகின்றது : சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Sunday, January 9, 2022

நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போது அதன் மூலமே அழிந்து வருவகின்றது : சஜித் பிரேமதாச

தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போது அதன் மூலமே அழிந்து வருவகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய திறமையான இளம் தலைமுறையை உருவாக்கும் நோக்கில் வகுப்பறைகளுக்கு டிஜிட்டல் கணினி திரைகள் மற்றும் கணினி உபகரணங்கள் வழங்கும் முன்னோடித் திட்டமான ´பிரபஞ்சம்´ திட்டத்தின் கீழ் மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு நேற்று (8) மதியம் வகுப்பறைகளுக்கு டிஜிட்டல் கணினி திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை எதிர்க்கட்சித் தலைவரினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போது அதன் மூலம் அழிந்து வருவகின்றது.

இனவாதம், இன பேதம், மதவாதத்தை விதைத்ததன் சாபத்தையே அரசாங்கம் இன்று அனுபவிக்கின்றது.

ஊட்டச்சத்து குறைபாடும் போசாக்கின்மையும் தலைவிரித்தாடும் நாட்டில் உள்ள குழந்தைகளின் இணைய வழி கல்விக்கு தீர்வை வழங்க முடியாத அரசாங்கத்தால் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எவ்வாறு தீர்வை வழங்க முடியும்.

முன்னெப்போதையும் விட இந்நாட்களில் தேசிய ஊட்டச்சத்து கொள்கையின் தேவை மிகவும் உணரப்பட்டு வருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் குறித்த கொள்கையின் தேவை நிறைவேற்றப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment