(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு - கல்குடா, கும்புறுமூலை நாகவத்தை (கஜுவத்தை) கடலில் நீராடிய ஏழு சிறுவர்களில் இருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ள சோகச்சம்பவமொன்று இன்று (14) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு - கிரான் பகுதியைச் சேர்ந்த ஏழு சிறுவர்கள் குறித்த கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே இருவர் கடலில் மூழ்கியுள்ளனர்.
இதில், கிரான் பிரதான வீதியைச் சேர்ந்த ஜீவானந்தா சுஜினன் (வயது 16), ச.அஸ்வன் (வயது 16) ஆகிய இரு சிறுவர்களும் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
கடலில் நீராடிய மற்றுமொரு சிறுவன் காப்பாற்றப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலில் காணாமல் போன சிறுவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்த போதும் இதுவரை இரண்டு சிறுவர்களும் மீட்கப்படவில்லை.
கடலில் மூழ்கி காணாமல் போன சிறுவர்களை தேடும் பணியில் கல்குடா சுழியோடிகள், மீனவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் சிறுவர்கள் இதுவரை மீட்கப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment