(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் கொட்டப்பட்டுள்ள கொங்ரீட் கற்களை அப்புறப்படுத்துமாறு மைதானத்தைப் பயன்படுத்தும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் குடிநீர்க் குழாய்கள் பொருத்துவதற்காக பல வருடங்களுக்கு முன்னர் கொங்ரீட் வீதிகள் தோண்டப்பட்டன.
அவ்வாறு தோண்டப்பட்ட கழிவுக்கற்களே இவ்வாறு ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் ஒரு பகுதியில் கொட்டப்பட்டுள்ளன.
குறித்த மைதானத்தை பிரதேசத்திலுள்ள ஏராளமான விளையாட்டுக் கழக வீரர்களும், பாடசாலை மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
அத்தோடு, குறித்த மைதானத்தை பிரதேசத்திலுள்ள அரச உத்தியோகத்தர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் உடற்பயிற்சி செய்வதற்குப் பாயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு நீண்ட வருடங்களாக கவனிப்பாறற்றுக் காணப்படும் கற்களை அப்புறப்படுத்தி அனைவரும் பயன்படுத்தும் வகையில், மைதானத்தைப் புனர்நிர்மாணம் செய்ய ஓட்டமாவடி பிரதேச சபை நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment