புதிய பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் நிலையில் ஆளும் கட்சி? - News View

About Us

About Us

Breaking

Sunday, January 16, 2022

புதிய பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் நிலையில் ஆளும் கட்சி?

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாம் கூட்டத் தொடர் எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது.

குறிப்பாக ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்கி வெளியேறுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.

ஆனால் இதனை உறுதி செய்யும் முகமாக சுதந்திர கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சிரேஷ்ட உப தலைவருமான பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாசவிடம் வினாவிய போது,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான ஒப்பந்தம் இன்று முற்றுமுழுவதுமாக மீறப்பட்டுள்ளது. எனவே பொறுமையிழந்த நிலையில் உள்ளோம் என்று தெரிவித்தார்.

பல முக்கிய தீர்மானங்களை எதிர்வரும் நாட்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிப்பார் என்றும் பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஆளும் கூட்டணியிலிருந்து சுதந்திர கட்சி விலகும் தீர்மானம் எடுக்கப்பட்டால் சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்கள் மாத்திரம் அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதில்லை. மாறாக சுமார் 16 பேர் வரை சுதந்திர கட்சியுடன் இணைந்து வெளியேருவார்கள் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ள புதிய பாராளுமன்ற அமர்வு ஆளும் கட்சிக்கு சவால்மிக்கதாகவே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment