(இராஜதுரை ஹஷான்)
பொதுப் பயணிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் புகையிரத சேவையாளர்கள் இனி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டால் அவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், புகையிரத தொழிற்சங்கத்தினர் இதுவரை காலமும் முன்வைத்த கோரிக்கைகயை நெருக்கடியான சூழ்நிலையில் இயலுமான அளவில் செயற்படுத்தியுள்ளோம்.
புகையிரத சேவையில் ஈடுபட்டதன் பின்னர் இடை நடுவில் புகையிரதத்தை நிறுத்தி விட்டு பொதுப் பயணிகளை அசௌகரியங்களுக்குள்ளாக்குவது முற்றிலும் தவறானதொரு செயற்பாடாகும்.
புகையிரத சேவையில் மாதம் 2 இலட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் பெறுபவர்களே பொதுப் பயணிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
பொதுப் பயணிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தொழிற்சங்கத்தில் ஈடுபடும் புகையிரத சேவையாளர்கள் உட்பட ஏனைய சேவை தொழிற்சங்கத்தினர் இனிவரும் காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
புகையிரத சேவையில் பல்வேறு சிக்கல் நிலை காணப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறோம், எனினும் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சவார்த்தை ஊடாக தீர்வு காண முடியும்.
பொதுப் பயணிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் பொது போக்குவரத்து சேவையாளர்களுக்கு எதிராக இனிவரும் காலங்களில் கடுமையான நடவடிக்கையினை இனி முன்னெடுக்க நேரிடும் என்றார்.
No comments:
Post a Comment