(எம்.எப்.எம்.பஸீர்)
கொள்ளுபிட்டி, பிளவர் வீதியில், லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் லொறியின் சேவகர்களை தாக்கிவிட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர் மூன்றினை கொள்ளையிட்டதாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுபிட்டி பொலிஸார் இம் மூவரையும் நேற்று 94) கைது செய்ததாக கூறினர்.
சமையற்காரர் ஒருவர், உணவகம் ஒன்றில் மதுபான பிரிவுக்கு பொறுப்பான ஒருவர், முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2021 டிசம்பர் 29 ஆம் திகதி, லிட்ரோ நிறுவனத்தின் களனி முகவருக்கு சொந்தமான லொறியூடாக கொள்ளுபிட்டி, பிளவர் வீதியிலுள்ள உணவகம் ஒன்றுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தின் போது முச்சக்கர வண்டியொன்றில் வந்துள்ள சந்தேக நபர்கள், லொறியின் சேவகர்களை தாக்கிவிட்டு மூன்று சிலிண்டர்களை கொள்ளையிட்டு சென்றதாக கொள்ளுபிட்டி பொலிஸாருக்கு முறையிடப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே முன்னெடுக்கப்பட்ட விசரணைக்கு அமைய மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளர்.
No comments:
Post a Comment