இலங்கை வந்தார் மாலைத்தீவு சபாநாயகர் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 16, 2022

இலங்கை வந்தார் மாலைத்தீவு சபாநாயகர்

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

நஷீத்துடன் இரண்டு பேர் கொண்ட தூதுக்குழுவும் நாட்டுக்கு வருகை தந்ததாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானத்தில் வருகை தந்த தூதுக்குழுவினர் இன்று பிற்பகல் 12.45 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினர்.

இக்குழுவினர் எதிர்வரும் புதன்கிழமை நாட்டை விட்டுச் செல்லவுள்ளனர்.

No comments:

Post a Comment