அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கிச் சூடு : 6 பேர் படுகாயம் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 16, 2022

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கிச் சூடு : 6 பேர் படுகாயம்

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். 

அமெரிக்காவின் ஓரேகான் மாநிலம் யூஜின் நகரில் வெள்ளிக்கிழமை இரவு பிரபல இசைக்கலைஞர் லின் பீன் அண்ட் ஜே பாங் மற்றும் பிற கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கின் பின்புற வாசல் அருகே ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.

இதனால் அனைவரும் அலறியடித்து ஓடினர். சிலர் தரையில் படுத்துக் கொண்டனர். இதனால் அங்கு குழப்பமான சூழல் உருவானது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள், 4 ஆண்கள் என 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சந்தேகப்படும்படியான நபர்களிடம் விசாரணை நடத்தினர். எனினும், துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒருவரும் கைது செய்யப்படவில்லை. 

அங்கிருந்த ரசிகர்களிடம் துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஏதாவது துப்பு கிடைத்தால் கூறும்படி கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

No comments:

Post a Comment