கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஹெய்டி சுதந்திரக் கொண்டாட்ட நிகழ்வின்போது அந்நாட்டு பிரதமர் ஏரியேல் ஹென்ரியை துப்பாக்கிதாரிகள் படுகொலை செய்ய முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு நகரான கொனைவிஸில் உள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் பங்கேற்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் பிரதமர் மற்றும் அவரது பரிவாரங்கள் தமது வாகனங்களை நோக்கிச் செல்லும் காட்சிகளைக் கொண்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலையில் ஜனாதிபதி ஜொவெனல் மொயிஸ் படுகொலை செய்யப்பட்டது தொடக்கம் நாட்டின் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment