உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்க நேரிட்டால், அதனை நிவர்த்தி செய்வதற்காக மிகையாக உள்ள நாடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும், உலக நாடுகளின் நடைமுறையை நாமும் பின்பற்ற முடியுமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம் என பெருமளவானோர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
டுபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகள் நெல் உற்பத்தியை மேற்கொள்வதில்லை. எனினும் அந்த நாடுகளில் மக்கள் பட்டினியை எதிர்நோக்கவில்லை.
உலகில் எந்த நாடானாலும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் உள்ள இடத்திலிருந்து உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதே நடைமுறையாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்ற பொஸ்பேட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment