கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று (31) இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து நேற்று (30) மீன்பிடிக்கச் சென்ற காவத்தமுனை பகுதியை சேர்ந்த 74 வயதுடைய அச்சி முகம்மது ஆதம் பாவா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆழ்கடலில் வைத்து மீனவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் மீனவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(எச்.எம்.எம். பர்ஸான்)
No comments:
Post a Comment