மஹரகம, நாவின்ன பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவர் கடந்த 5 நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (07) முதல் குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளனர்.
இன்றுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் சிறுமி எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.
காணாமல்போன சிறுமி 5’3” உயரம் உடைய நேஹா கௌமதி ஹேரத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் காணாமல்போன அன்று பச்சை நிற டி-சேர்ட் மற்றும் கறுப்பு கால்சட்டை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.
காணாமல்போன சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 071 859 1645 / 0112 850222 / 0112 850 700 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment