நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்து சேவை இடம்பெற்றபோது பாரிய அசம்பாவிதம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது.
இன்று (புதன்கிழமை) காலை 100 ற்கு மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திர தேவி படகு இடை நடுவில் பழுதடைந்த நிலையில் பின்னர் வடதாரகைப் படகின் உதவியுடன் குறிகட்டுவான் நோக்கி இழுத்து செல்லப்பட்டது.
சுக்கான தடி உடைந்தமையினால் இடைநடுவில் பயணிகளை வடதாரகைப்படகிற்கு மாற்ற முடியாத நிலையிலும் பல இடையூறுகள் மத்தியிலும் வடதாரகைப்படகு இழுத்து செல்லப்பட்டது.
காலை 07.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்ட மக்கள் காலை 10.00 மணியினை அண்மித்தே குறிகட்டுவான் இறங்கு துறைமுகம் சென்றடைந்தனர்.
(யாழ். விசேட நிருபர்)
No comments:
Post a Comment