சதொச மூலம் தண்ணீர் போத்தல் விற்பனை, மீளளிக்கும் வெற்றுப் போத்தலுக்கு 10 ரூபா - அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 5, 2022

சதொச மூலம் தண்ணீர் போத்தல் விற்பனை, மீளளிக்கும் வெற்றுப் போத்தலுக்கு 10 ரூபா - அமைச்சர் பந்துல

லங்கா சதொச என்ற பெயரில் குறைந்த விலையில் தண்ணீர் போத்தல்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளை சதொச நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

35 ரூபாவுக்கு மேற்படி தண்ணீர் போத்தல் விற்பனை செய்வதுடன் வெற்றுப் போத்தலை மீளக் கையளிக்கும் போது நுகர்வோர் பத்து ருபாவை மீளப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், SLS தர நிர்ணயத்துடன் தண்ணீர் போத்தல் 35 ரூபாவுக்கு இன்று (05) முதல் சதொச நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 

சுற்றாடல் மாசைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில் வெற்றுப் போத்தலை மீளப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க நுகர்வோர் வெற்றுப் போத்தலை மீள வழங்கி மற்றுமொரு தண்ணீர் போத்தலைப் பெற்றுக் கொள்ளும் போது அவர்களிடமிருந்து 25 ரூபா மட்டுமே அறவிடப்படும்.

இதற்கு முன்னரும் சதொச மூலம் தண்ணீர் போத்தல் விற்பனை இடம்பெற்றுள்துடன் அதன் மூலம் நூற்றுக்கு 20 வீதமான இலாபத்தையும் அந்த நிறுவனம் பெற்றுக் கொண்டது. 

இம்முறை தண்ணீர் போத்தல் விற்பனை மூலம் 25 வீத இலாபத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெவித்துள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments:

Post a Comment