கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு : டொங்காவில் சுனாமி அலை தாக்கம் - வீடியோ - News View

Breaking

Saturday, January 15, 2022

கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு : டொங்காவில் சுனாமி அலை தாக்கம் - வீடியோ

பசிபிக் நாடான டொங்காவில் கடலுக்கடியில் சீற்றத்துடன் இருந்த எரிமலை வெடித்தது. இதையடுத்து கடலில் சுனாமி அலைகள் உருவாகின. நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிமலை வெடித்த பின்னர் கடலில் மிகப்பெரிய அலைகள் எழுந்தன. சுனாமி போன்ற பெரிய அலைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

டொங்காவின் அனைத்து பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக டோங்கா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment