ரஞ்சன் சிறையிலிருந்தவாறு உயர் கல்வியை தொடர நீதிமன்றம் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 11, 2022

ரஞ்சன் சிறையிலிருந்தவாறு உயர் கல்வியை தொடர நீதிமன்றம் அனுமதி

தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறையில் இருந்த வகையில் உயர் கல்வியை தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போதுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு நாவலவில் உள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் மேம்பாட்டு பணிக்கான முகாமைத்துவ மற்றும் தலைமைத்துவ திறன்கள் தொடர்பான கல்வி நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜூம் தொழில்நுட்பம் மூலம் விரிவுரைகளில் கலந்துகொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்படும் என சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment