நாட்டில் எந்தவொரு சூழ்நிலையிலும் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (9) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், நாட்டில் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி எனக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆகவே நாட்டில் எவ்வாறான நிலைமையிலும் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் எதுவும் இடம்பெறப் போவதில்லை என அமைச்சர் உறுதியளித்தார்.
நாட்டில் அன்னிய செலாவணி பிரச்சினை இருப்பது உண்மைதான். ஆனால் மருந்து தட்டுப்பாடு அபாயம் இல்லை, என தெரிவித்த அமைச்சர் நாட்டில் மருந்துப் பொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாகவும், அவ்வாறான நிலைமையை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(எம்.ஏ. அமீனுல்லா)
No comments:
Post a Comment