இருபது நாடுகளில் இலங்கையும் தெரிவு ! - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 5, 2022

இருபது நாடுகளில் இலங்கையும் தெரிவு !

உலகின் சிறந்த 20 சுற்றுலாத் தலங்களில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

CNN செய்தி சேவையினால் தயாரிக்கப்பட்ட CNN Travel சுற்றுலா நாடுகளுக்கான 2022 ஆண்டு பட்டியலிலேயே இவ்வாறு இலங்கை இடம்பிடித்துள்ளது.

உலகளாவிய கொரோனா தொற்று நோய்க்குப் பின்னர் உலக நாடுகளை மீண்டும் திறக்கும் போது இந்த இடங்களை கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக 20 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. 

அதன்படி ஆன்டிகுவா மற்றும் பார்புடா தளமாக கொண்ட மேற்கிந்திய தீவுகள், லத்தீன் அமெரிக்க நாடான சிலி, பிரான்ஸ், கிரீன்லாந்து, பின்லாந்து, இத்தாலி மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்த பட்டியலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் அந்தப் பட்டியலில் இலங்கையின் கவர்ச்சிகரமான கடற்கரைகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் சுவையான உணவுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

No comments:

Post a Comment