சீன எல்லையை திறக்க கோரும் வியட்நாம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 4, 2022

சீன எல்லையை திறக்க கோரும் வியட்நாம்

சீனா அதன் எல்லையைத் திறக்க வேண்டும் என்று வியட்நாமின் வர்த்தக அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

சீனா கொவிட்–19 முற்றிலும் துடைத்தொழிக்கும் நடவடிக்கையைப் பின்பற்றுகிறது. அதனால் அங்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளன. அதனால் வியட்நாமின் வர்த்தகத்திற்குப் பெரும் அடி விழுந்துள்ளது.

எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக வியட்நாமைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரக்கு லொறிகள் சீனாவின் எல்லையில் பொருட்களுடன் காத்துள்ளன.

சீனாவின் குவாங்சி மாநிலத்தில் கொவிட்–19 நோய்த் தொற்று சம்பவம் அடையாளம் காணப்பட்டுள்ளது, அதனால் இப்போது கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அது வியட்நாமிற்குக் கூடுதல் கவலையைத் தந்துள்ளது.

சீனாவின் கட்டுப்பாடுகளால் இரண்டு தரப்புகளிலும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று வியட்நாம் தெரிவித்தது.

வியட்நாமின் பெரிய வர்த்தகப் பங்காளிகளில் சீனாவும் ஒன்று. சீனாவிற்குப் பெரிய அளவில் காய்கறிகளையும் பழங்களையும் வியட்நாம் ஏற்றுமதி செய்கிறது.

No comments:

Post a Comment