இன்று மின் வெட்டா ? - அறிவித்துள்ள மின் சக்தி அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 12, 2022

இன்று மின் வெட்டா ? - அறிவித்துள்ள மின் சக்தி அமைச்சு

முன்னதாக அறிவித்தபடி இன்று திட்டமிடப்பட்ட மின் வெட்டு இருக்காது என மின் சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

தனியாருக்குச் சொந்தமான களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதால் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அமைச்சு தெரிவித்துள்ளது.

அனல்மின் நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கி ஒன்று நேற்று பழுதடைந்ததால் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது, தற்போது அது சரி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை (CEB) திட்டமிடப்பட்ட மின் வெட்டு தொடர்பான அட்டவணையை நேற்றுமுன்தினம் வெளியிட்டது.

அட்டவணைப்படி மாலை 5.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை தினமும் ஒரு மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்தது.

எவ்வாறாயினும் மின்சார சபை பின்னர் தனது முடிவை திருத்தியதுடன், நேற்று மின் வெட்டு இருக்காது என்று கூறியது, ஆனால் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.

இந்நிலையில் இன்று திட்டமிடப்பட்ட மின் வெட்டு இடம்பெறும் என மின்சார சபை இன்று காலை அறிவித்திருந்தது. எனினும் தற்சமயம் திட்டமிடப்பட்ட மின் வெட்டு இருக்காது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை அதன் பல மின் உற்பத்தி நிலையங்களில் மீண்டும் மீண்டும் பழுதடைவதால் 2021 டிசம்பர் முதல் மின் தடையை எதிர்நோக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment