காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தில் இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 14, 2022

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தில் இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் விலகி காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

சங்கத்தின் துணைத் தலைவரை பணி இடைநீக்கம் செய்ய நிர்வாகம் எடுத்த தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுத்துள்ளனர்.

துணைத் தலைவரை பணி இடைநீக்கம் செய்யும் அதிகாரிகளின் முடிவினை இரத்து செய்யும் வரை வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத பயண கால அட்டவணையை நடைமுறைப்படுத்தாமை, ரயில்வே ஊழியர்களை முறையாக நிர்வாகம் செய்ய தவறியமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment