தடையின்றி எரிபொருளை விநியோகிக்க 4 ஆயிரம் பில்லியன் டொலர்கள் அவசியம் - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 16, 2022

தடையின்றி எரிபொருளை விநியோகிக்க 4 ஆயிரம் பில்லியன் டொலர்கள் அவசியம் - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

(இராஜதுரை ஹஷான்)

மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளுக்கு தடையில்லாமல் எரிபொருளை விநியோகிக்க வேண்டுமாயின் மத்திய வங்கி எரிபொருள் இறக்குமதிக்கான டொலரை தாமதமில்லாமல் விடுவிக்க வேண்டும்.

இவ்வருடத்தின் இறுதி காலப்பகுதிகளுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 4 ஆயிரம் பில்லியன் அமெரிக்க டொலரை மத்திய வங்கி கட்டம் கட்டமாக விடுவிக்க வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வருடத்தின் இறுதி காலப்பகுதிக்காக எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான 4 ஆயிரம் பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டிக் கொள்ளும் விதம் குறித்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ முக்கிய நிறுவனங்களின் பிரதானிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, நிதியமைச்சு, வலு சக்தி அமைச்சு, மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களின் பிரதானிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை ஆகிய இரு பிரதான துறைகளுக்கும் தடையில்லாமல் எரிபொருள் விநியோகிப்பதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment