இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. பொதுநலவாய மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெறுவதற்காக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஜனவரி 9 ஆம் திகதி மலேசியாவுக்கு செல்லவுள்ளது.
ஜனவரி 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இப் போட்டிக்கான 16 பேர் கொண்ட குழாம் சாமரி அதபத்துவின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் துணைத் தலைவராக ஹர்ஷிதா மாதவி நியமிக்கப்பட்டுள்ளார்.
5 அணிகள் பங்கேற்கும் இந்த தகுதிச்சுற்றில் அதிக போனஸ் புள்ளிகளைப் பெறும் அணி, பர்மிங்காமில் 2022 ஜூலை 29 அன்று தொடங்க உள்ள ஐ.சி.சி. பொதுநலவாய மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டிகளி பங்கெடுக்க தகுதி பெறும்.
சர்வதேச கிரிக்கட் நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்படும் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்களாதேஷ், கென்யா, ஸ்காட்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகள் இலங்கையின் ஏனைய போட்டியாளர்களாக இருக்கும்.
இலங்கை 19, 20, 22 மற்றும் 24 ஆம் திகதிகளில் முறையே ஸ்கொட்லாந்து, கென்யா, மலேசியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளை எதிர்கொள்ளும்.
இலங்கை மகளிர் அணி
சாமரி அதபத்து (தலைவர்), ஹர்ஷிதா மாதவி (துணை தலைவர்), ஹாசினி பெரேரா, நிலக்ஷிகா சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, கவீஷா தில்ஹாரி, அமா காஞ்சனா, சச்சினி நிசான்சாலா, உதேஷிகா பிரபோதனி, இனோகா ரணவீர, விஷ்மி, ஓ ராஜபக்ஷ, விஷ்மி, ராஜபக்ஷ, தாரிகா செவ்வந்தி, பிரசாதினி வீரக்கொடி மற்றும் அச்சினி குலசூரிய.
No comments:
Post a Comment