பாகிஸ்தானில் E 93 பொறியியல் பீட நண்பர் கொலை : பொதுஜன பொறியியலாளர் சங்கம் வன்மையான கண்டனம் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 4, 2021

பாகிஸ்தானில் E 93 பொறியியல் பீட நண்பர் கொலை : பொதுஜன பொறியியலாளர் சங்கம் வன்மையான கண்டனம்

பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் பொறியியலாளர் பிரியந்த குமார தியவதன பேராதனை (E93) பொறியியல் பீடத்தின் எனது நண்பர் கொல்லப்பட்டதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோமென பொதுஜன பொறியிலாளர் சங்கத்தின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனது நண்பர் பிரியந்த குமார தியவதன, 1995ஆம் ஆண்டு முதல் அவரை ஒரு நல்ல நேர்மையான மனிதராக நான் நன்கு அறிவேன். எல்லோரையும் சமமாகவும் மரியாதையாகவும் நடத்தும் மிகவும் கண்ணியமான மற்றும் அப்பாவி நபர் அவர்.

கடந்த 10 ஆண்டுகளாக அதே பாகிஸ்தான் நிறுவனத்தில் பொது முகாமையாளராக பணிபுரிந்து வரும் அவர், ஒரு சராசரி நிறுவனத்தை பெரிய அளவிலான நிறுவனமாக உருவாக்க முக்கிய நபராக இருந்து வந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நமது நட்பு நாட்டில் நடந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. தனிப்பட்ட முறையில் நான் பல பாகிஸ்தான் தொழில் வல்லுநர்கள் மற்றும் நண்பர்களுடன் பணிபுரிந்து வருகிறேன், அவர்கள் மிகவும் மென்மையானவர்கள். ஆனால் இதுபோன்ற மதக் காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டு நாம் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது.

கனேமுல்ல வெலிபிஹில்ல சந்தியில் பிரியந்த தியவதனவின் இல்லம் உள்ளது. 14 மற்றும் 09 வயதில் இரண்டு மகன்களைக் கொண்ட தனது குடும்பத்திற்கு சிறந்த வாழ்க்கையை பெற்றுக் கொடுக்க தனது வாழ்க்கையை தியாகம் செய்த அவர் மிகவும் பொறுப்பான தந்தை.

தொழில் வல்லுநர்கள் மற்றும் இலங்கையர் என்ற வகையில், இலங்கையின் பொறியியலாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று நாங்கள் கோருகிறோம், மேலும் அனைத்து வகையான மத தீவிரவாதத்தையும் துடைத்தழிக்க விரும்புகிறோம்.

No comments:

Post a Comment