மனிதாபிமானமற்ற செயல் : அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 4, 2021

மனிதாபிமானமற்ற செயல் : அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

பாகிஸ்தானின் சியால்கோட் தொழிற்சாலையில் இலங்கையைச் சேர்ந்த முகாமையாளர் மனிதாபிமானமற்ற முறையில் உயிருடன் எரிக்கப்பட்டதை நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு, இது தொடர்பாக நூற்றுக்கும் அதிகமான சந்தேக நபர்களை கைது செய்து அவசரமாக நடவடிக்கைகளை மேற்கொண்ட பாகிஸ்தானின் சட்ட அமுலாக்க அதிகாரிகளை நாம் பாராட்டுகின்றோம்.

இந்த கொடூரக் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித், அனுப்பி வைத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எங்களின் கவலையையும் பிரார்த்தனைகளையும் மரணித்தவரின் குடும்பத்திற்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.

உலகளாவிய மக்கள் அனைவரும் சட்டத்தை மதித்து, சமூகங்களுக்கிடையில் நிலையான சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்கு மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் என்பதும் எமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த முன்மாதிரிகளை விட்டுச் செல்ல வேண்டும் என்பதுமே எமது எதிர்பார்ப்பாகுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment