இலங்கையில் பல்வேறு டெல்டா வைரஸ் துணைப் பரம்பரைகள் கண்டுப்பிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, December 4, 2021

இலங்கையில் பல்வேறு டெல்டா வைரஸ் துணைப் பரம்பரைகள் கண்டுப்பிடிப்பு

(எம்.மனோசித்ரா)

இலங்கைக்குள் புதிய கொவிட் பிறழ்வுகள் நுழைந்துள்ளனவா என்பது தொடர்பில் பேராசிரியர் நீலிகா மாலவிகே மற்றும் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் மற்றும் கற்கை ஊடாக வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களில் மாதிரிகளில் வெவ்வேறு டெல்டா துணைப் பரம்பரைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இது குறித்த ஆய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த இரு வாரங்களுக்குள் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் 94 மாதிரிகள் இந்த கற்கைக்கு உட்படுத்தப்பட்டன.

இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கராப்பிட்டி, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுடையதாகும்.

இவற்றில் நைஜீரியாவிலிருந்து வருகை தந்த பெண்ணுடைய மாதிரியிலேயே 'ஒமிக்ரோன்' இனங்காணப்பட்டது. இது தவிர ஏனைய அனைத்து மாதிரிகளும் டெல்டா பிறழ்விற்குள்ளானவையாகும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களது மாதிரிகள் இவற்றில் உள்ளடங்குவதோடு, அவற்றில் டெல்டா துணைப் பரம்பரைகள் கண்டறியப்பட்டுள்ளன.

'ஒமிக்ரோன்' தொற்றுறுதி செய்யப்பட்ட பெண்ணுடைய மாதிரியை தவிர எஞ்சிய 93 மாதிரிகளில் 31 இல் 'ஏ.வை.28 (AY.28)' என்ற டெல்டா துணைப் பரம்பரை கண்டறியப்பட்டுள்ளது. இது கொழும்பு, கம்பஹா, நுவரெலியா, பலாங்கொடை, பெந்தோட்டை, குருவிட்ட மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுடைய மாதிரிகளிலேயே இனங்காணப்பட்டுள்ளது.

இதேபோன்று 'ஏ.வை.104 (AY.104)' என்ற டெல்டா துணைப் பரம்பரை 93 இல் 43 மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு, பண்டாரகம, கெட்டஹேன, கம்பஹா, பாலிந்தநுவர, வவுனியா, வாகா மற்றும் வெல்கம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுடைய மாதிரிகளில் இந்த துணைப் பரம்பரை கண்டறியப்பட்டுள்ளது.

இவை தவிர 'ஏ.வை.122(AY.122)' என்ற துணைப் பரம்பரை கொஸ்கம பகுதியைச் சேர்ந்தவரது மாதிரியிலிருந்தும், 'ஏ.வை.33 (AY.33)' என்ற துணைப் பரம்பரை களுத்துறை பகுதியைச் சேர்ந்தவரது மாதிரியிலிருந்தும், 'ஏ.வை.4(AY.4)' என்ற துணைப் பரம்பரை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவரது மாதிரியிலிருந்தும், 'ஏ.வை.61(AY.61)' என்ற துணைப் பரம்பரை தலங்கம பகுதியைச் சேர்ந்தவரது மாதிரியிலிருந்தும், 'ஏ.வை.66(AY.66)' என்ற துணைப் பரம்பரை புவக்பிட்டி பகுதியைச் சேர்ந்தவரது மாதிரியிலிருந்தும், 'பீ.1.617.2(B.1.617.2)' என்ற துணைப் பரம்பரை கொழும்பு, கம்பஹா, திருகோணமலை மற்றும் புவக்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களது மாதிரிகளிலிருந்தும் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment