மீனவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு தீர்வு கோரி யாழில் கையெழுத்து வேட்டை - News View

About Us

About Us

Breaking

Saturday, December 4, 2021

மீனவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு தீர்வு கோரி யாழில் கையெழுத்து வேட்டை

இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி இன்று (04) யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை யாழ்ப்பாண நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் பெற்றுக் கொள்ளப்படும் கையெழுத்துகளுடனான மகஜர் ஜனாதிபதி, சட்டமா அதிபர் மற்றும் கடற்றொழில் அமைச்சரிம் கையளிக்கப்படவுள்தாக தெரிவிக்கப்பட்டுள்து.

ஏற்கனவே மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை இடம்பெற்ற நிலையில் யாழ் நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment