கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் வெடி மருந்துடன் நுழைய முற்பட்டவர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, December 4, 2021

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் வெடி மருந்துடன் நுழைய முற்பட்டவர் கைது

(எம்.மனோசித்ரா)

பொற்றாசியம் - பெர்குளோரைட்டு எனப்படும் 25 கிலோ வெடி மருந்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட வேன் சாரதியொருவர் விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட வெடி மருந்துடன் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்போது தான் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்காகவே அவற்றை அனுமதியுடன் கொண்டு வந்ததாகவும் குறித்த சந்தேகநபர் தெரிவித்துள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment