விண்வெளிக்கு சுற்றுலா சென்ற ஜப்பானிய கோடீஸ்வரர் பூமி திரும்பினார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 21, 2021

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற ஜப்பானிய கோடீஸ்வரர் பூமி திரும்பினார்

ஜப்பான் நாட்டு செல்வந்தர் யுசாகு மெசாவா 12 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பின் பூமிக்குத் திரும்பியுள்ளார்.

இந்த பயணத்தின் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின் சொந்த செலவில் விண்வெளிக்கு சென்ற முதல் நபர் என்ற பெருமையை யுசாகு மெசாவா பெற்றுள்ளார்.

எலொன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் 2023 இல் நிலவை சுற்றிவரும் அவரது திட்டத்திற்கான ஓர் பயிற்சியாகவே அவர் விண்வெளிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

ஜப்பானை சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரரான யுசாகு மெசாவா சோயுஸ் எம்20 என்ற ரஷிய விண்கலம் மூலம் கடந்த 8ஆம் திகதி விண்வெளிக்கு சுற்றுலா சென்றார்.

46 வயதான யுசாகு மெசாவாவுடன் அவரது உதவியாளர் யோசோ ஹிரானோ என்பவரும் அலெக்சாண்டர் மிசுர்கின் என்ற ரஷிய விண்வெளி வீரரும் விண்வெளி சென்றனர்.

12 நாட்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்த யுசாகு மெசாவா உள்ளிட்ட 3 பேரும் அதே சோயுஸ் எம்20 விண்கலத்தில் நேற்றுமுன்தினம் இரவு பூமிக்கு புறப்பட்டனர்.

இந்த விண்கலம் ரஷிய நேரப்படி நேற்று காலை 06:16 மணிக்கு கஜகஸ்தான் நாட்டின் தென்கிழக்கில் உள்ள பாலைவன பகுதியில் பத்திரமாக தரையிறங்கியது.

இந்த பயணத்தின் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின் சொந்த செலவில் விண்வெளிக்கு சென்ற முதல் நபர் என்ற பெருமை யுசாகு மெசாவா பெற்றுள்ளார்.

'சயூஸ் எம்.எஸ்–20 சுற்றுலா விண்கலத்தின் பயணம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது' என்று ரஷ்ய விண்வெளி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி கசகஸ்தானில் இருந்து விண்வெளிக்கு புறப்பட்ட மெசாவா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்தார். 

அவர் 2023 ஆம் ஆண்டு முதலாவது தனியார் பயணியாக நிலவுக்கு பயணிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். தன்னுடன் நிலவுக்குச் செல்ல அவர் ஏழு பேரை தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment