(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்தரிப்பு நிலையத்தை இந்தியாவிற்கு விற்கும் நோக்கத்திலா மூடப்பட்டுள்ளது ? நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தற்போதைய இந்திய விஜயத்தில் இது கைமாற்றப்படுமா எனவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (01) , வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனை கூறினார்.
அவர் இது குறித்து தெரிவிக்கையில், நாட்டில் உரப் பிரச்சினை இருப்பதாகவும், இறக்குமதி செய்யமாட்டோம் எனவும் கூறி இப்போது கருப்பு சந்தைக்காரர்களுக்கு உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் சமையல் எரிவாயு தொடர்பில் பல்வேறு காரணிகளை கூறி, குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எரிவாயு நிறுவனத்தை வேறு எவருக்காவது வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கா தற்போது சமையல் எரிவாயு தொடர்பான பிரச்சினைகள் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதென்ற சந்தேகமும் எழுந்துள்ளது,
இதே நிலைமைதான் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்தரிப்பு நிலையத்திற்கும் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய தற்போது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்தரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளன.
சிறிது காலம் சென்றதன் பின்னர் இந்த நிலையம் பழுதடைந்துவிட்டது, இதில் பிரச்சினைகள் காணப்படுவதால் அதனை நடத்திச் செல்ல முடியாது என தெரிவித்து, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் எவருக்கும் விற்கப்படும்.
தற்போது நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு சென்றுள்ளார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கும் உடன்படிக்கையை செய்யத்தான் நிதி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ இந்தியாவுக்கு சென்றுள்ளாரா என்ற கேள்வியும் எழுகின்றது என்றார்.
No comments:
Post a Comment