இன்றும், நாளையும் மின் துண்டிப்பு - News View

Breaking

Tuesday, December 7, 2021

இன்றும், நாளையும் மின் துண்டிப்பு

இன்றும், நாளையும் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை தினசரி ஒரு மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்றில் இரண்டு ஜெனரேட்டர்களில் ஏற்பட்ட கோளாறு தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும் 2 ஆவது ஜெனரேட்டர் இன்னும் முழுமையாக சரி செய்யப்படவில்லை என்றும், முழுமையாக செயல்பட இன்னும் 2 நாட்கள் ஆகும்.

இதனால் இன்றும், நாளையும் ஒரு மணிநேரம் மின் தடை அமுல்படுத்தப்படும் என சுலக்ஷனா ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பாரிய செயலிழப்பு காரணமாக இலங்கை வெள்ளிக்கிழமை (03) நாடளாவிய ரீதியில் பல மணித்தியாலங்களுக்கு மின் தடையை எதிர்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment