தவறான காலை துண்டித்த மருத்துவருக்கு நீதிமன்றம் அபராதம் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 4, 2021

தவறான காலை துண்டித்த மருத்துவருக்கு நீதிமன்றம் அபராதம்

நோயாளியின் தவறான காலை துண்டித்த மருத்துவர் ஒருவருக்கு ஆஸ்திரிய நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வயதான நோயாளியின் இடது கால் துண்டிக்கப்படுவதற்கு பதில் வலது கால் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்குப் பின்னரே இந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்ட 43 வயது மருத்துவர் கடந்த புதன்கிழமை (1) இடம்பெற்ற வழக்கில் குற்றங்காணப்பட்டு 2,700 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. 

இந்த வழக்கிற்கு முன்னரே நோயாளி உயிரிழந்த நிலையில் அவரது விதவை மனைவிக்கு 5000 யூரோ இழப்பிடு வழங்கவும் நீதமன்றம் உத்தரவிட்டது.

பெரிஸ்டாட் நகரில் இருக்கும் மருத்துவமனையில் கடந்த மே மாதம் அனுமதிக்கப்பட்ட அந்த நோயாளியின் காலை துண்டிப்பதற்கான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதும் மருத்துவர் தவறான காலை அடையாளம் இட்டுள்ளார்.

இடது காலுக்கு பதில் வலது காலுக்கு அடையாளமிட்டது ஏன் என்று அந்த மருத்துவரிடம் நீதிமன்றத்தில் கேட்கப்பட்டபோது, 'எனக்குத் தெரியாது' என்று பதிலளித்துள்ளார்.

No comments:

Post a Comment