லாப நஷ்டத்தை ஏற்க வேண்டியுள்ளது, நாடுகளை கோபித்துக் கொண்டு பயணம் செய்ய முடியாது - அமைச்சர் ஜோன்ஸ்டன் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 19, 2021

லாப நஷ்டத்தை ஏற்க வேண்டியுள்ளது, நாடுகளை கோபித்துக் கொண்டு பயணம் செய்ய முடியாது - அமைச்சர் ஜோன்ஸ்டன்

இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலான செயற்பாடு காரணமாக நாம் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்க முடியாது. அதனால் லாப நஷ்டத்தை ஏற்க வேண்டியுள்ளது. நாடுகளை கோபித்துக் கொண்டு பயணம் செய்ய முடியாது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கும் நோக்கில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் குருநாகல் பதிவாளர் திணைக்களத்தின் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பின்னர் சீன உரக் கப்பல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கு பேச வேண்டியது பண விவகாரம் குறித்து அல்ல. இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்தே கவனிக்க வேண்டியுள்ளது. எனவே அதை வழங்க வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்தது. நாடுகளுடன் பணியாற்றும் போது கவனமாக இருக்க வேண்டும். அதில் எனக்கு எந்தத் தவறும் தெரியவில்லை யாராவது தவறு செய்தால், அந்த தவறை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு முன் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படப்போகும் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.

உடன்பாடு ஏற்பட்ட பிறகு தவறு, நடந்திருந்தால் பணத்தை செலுத்த வேண்டும். 6.5 மில்லியன் டொலர்களுக்காக நாட்டுடன் கோபப்படுவதா அல்லது அமைதியான முறையில் தீர்ப்பதா என்பதுதான் முதலில் பார்க்க வேண்டிய விஷயம்.

மக்களை மனதில் வைத்துத்தான் அரசாங்கம் முடிவுகளை எடுக்க வேண்டும். சில தவறுகள் உள்ளன. வரலாற்றில் இது முதல் சம்பவம் இதுவல்ல. தவறுகளை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.

சேதனப் பசளை ஊடான விவசாயம் குறித்து பரீட்சார்த்தமாக புதிய முயற்சி செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு உரம் வழங்க வேண்டும். இதனால் அரசு திடீரென சேதனப் பசளை கொண்டு வந்து மாதிரிகளை சோதனை செய்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது நமக்கு ஒத்து வரவில்லை.

இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலான செயற்பாடு காரணமாக நாம் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்க முடியாது. அதனால் லாப நஷ்டத்தை ஏற்க வேண்டியுள்ளது. நாடுகளை கோபித்துக் கொண்டு பயணம் செய்ய முடியாது.

No comments:

Post a Comment