யானை, மனித மோதல்களை தடுப்பதற்கான நிரந்தர தீர்வு அணைகள் கட்டுவதாகும். அவ்வாறு அணை கட்டுவதற்கு 75,000 கோடி தேவைப்படுகிறது என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, யானை - மனித மோதல்களுக்கு தீர்வு காணும் வகையில் யானை வேலிகளை பாதுகாப்பதற்காக மேலும் 5,000 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்க தீர்மானித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தல் நேற்று வரவு செலவு திட்ட குழுநிலை விவாதம் இடம்பெறாத நிலையில் வனஜீவராசிகள் அமைச்சின் திட்டங்கள் மற்றும் மேற்கொண்ட நடவடிக்கைகளை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 4600 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் மாதங்களில் மேலும் 5000 பேர் இணைத்துக் கொள்ளப்பட இருக்கின்றனர்.
அதற்கிணங்க கடந்த 2019ஆம் ஆண்டில் 407 யானைகளும் 2020ஆம் ஆண்டில் 328 யானைகளும் 2021ஆம் ஆண்டில் இதுவரை 333 யானைகளும் மரணமடைந்துள்ளன என தெரிவித்த அவர் ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் அது தொடர்பில் அமைச்சு மீதே விமர்சனங்களை முன்வைக்கின்றன என தெரிவித்தார்.
யானைகள் இயற்கையாக மரணிப்பதையும் மோதல்களில் எண்ணிக்கையுடன் சேர்த்து எதிர்க்கட்சி மற்றும் சில அமைப்புகள் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகின்றனர்.
அது முற்றிலும் தவறானது பெருமளவு யானைகள் யானை - மனிதர்களின் மோதல்களிலன்றி இயற்கை மரணம் மூலமாகவும் அனர்த்தங்களிலுமே மரணமடைகின்றன என தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment