உள்ளூராட்சி சபைகளை தோற்கடித்து, ஆணையாளர்களின் கீழ் சபைகளைக் கொண்டுவர முயற்சிப்பதைப்போல ஒரு மோசமான நிலை, எதுவுமில்லையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்,இவ்வாறு தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபை தவிசாளர்களின் செயற்பாடுகளில் பிழைகள் இருக்கலாம். அல்லது அவர்கள் நன்றாக செயற்படுகிறார்கள் என மக்கள் மத்தியில் அபிப்பிராயங்களும் இருக்கலாம். இவற்றில், சில கட்சிகள் சுயலாபம் அடையும் நோக்கில் அல்லது தனிப்பட்ட நோக்கில் சபைகளைத் தோற்கடிக்க முனைகின்றன. இது, ஆரோக்கிய சூழலை ஏற்படுத்தாது.
இன்னும் சில காலங்களுக்கு உள்ளூராட்சி சபைகள் நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், இந்தச் செயற்பாடுகள் ஆரோக்கியமாக அமையாது.
உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் ஏப்ரல் மாதமளவில் முடிவடையவுள்ள நிலையில், ஆறு மாத காலப்பகுதிக்கோ, ஒரு வருட காலப்பகுதிக்கோ சபைகள் நீடிக்கப்படக்கூடும் என நிச்சயமாக நம்புகிறேன்.
இவ்வாறான சூழலில், உள்ளூராட்சி சபைகளை தோற்கடிப்பது, ஆணையாளரின் கீழ் சபைகள் நிர்வகிக்கப்படும் நிலைமையை ஏற்படுத்தும்.
வட மாகாண சபை இல்லாததால், ஆளுநர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்களால் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அதேபோல உள்ளூராட்சி சபைகள், ஆணையாளர்களால் நிர்வகிக்கப்படுமாயின் இதே, கதிதான் ஏற்படும்.
யாழ்.விஷேட நிருபர்
No comments:
Post a Comment