"ஒமிக்ரோன்" மாறுபாட்டில் இதுவரை 32 பிறழ்வுகள் பதிவு : சமூக ஊடகங்களில் பொய்யான தகவல் - கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 7, 2021

"ஒமிக்ரோன்" மாறுபாட்டில் இதுவரை 32 பிறழ்வுகள் பதிவு : சமூக ஊடகங்களில் பொய்யான தகவல் - கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்

ஒமிக்ரோன் மாறுபாட்டின் சுமார் 32 பிறழ்வுகள் இதுவரை பதிவாகியுள்ளதாகவும் இதுவரை இறப்புகள் எதுவும் பதிவாகவில்லையென்றும் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் மாறுபாடு 32 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. டெல்டா மாறுபாடு 23 மற்றும் அல்பா மாறுபாடு 08 பிறழ்வுகளைக் கொண்டுள்ளதாகவும் வைத்தியர் ஜூட் ஜயமஹா தெரிவித்தார்.

இதன் விளைவாக, ஒமிக்ரோன் மாறுபாடு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக் கூடுமென உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததாக குறிப்பிட்ட வைத்தியர், அதே நேரத்தில் மற்ற காரணிகளும் உள்ளதாகவும் கூறினார்.

ஒமிக்ரோன் மாறுபாட்டிற்கு பூஸ்டர் டோஸ் பதிலளிக்கவில்லையென சமூக ஊடகங்களில் பொய்யான தகவல் பரப்பப்படுவதாக வைத்தியர் ஜூட் ஜயமஹா தெரிவித்தார்.

ஒமிக்ரோன் மாறுபாட்டின் வீரியம் காரணமாக கொரோனா தடுப்பூசியியை பெற்றுக் கொள்வது பயனற்றதென்ற கூற்றை மறுப்பதாவும் அவர் கூறினார்.

ஒருவரின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க அல்லது அன்டிபாடிகளை உருவாக்க தடுப்பூசிகளில் ஸ்பைக் புரதம் சேர்க்கப்பட்டுள்ளதென்றும் வைத்தியர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment