இலங்கை கடற்பரப்பில் மேலும் இரு படகுகளுடன் 12 இந்திய மீனவர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, December 20, 2021

இலங்கை கடற்பரப்பில் மேலும் இரு படகுகளுடன் 12 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 12 இந்திய மீனவர்களுடன் மேலும் 02 இந்திய மீன்பிடி இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினர் நேற்று மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த கைதுநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீன்பிடி இழுவை படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்கும் கடற்படையின் முயற்சியின் ஒரு பகுதியாக, டிசம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 08 இந்திய மீன்பிடி இழுவை படகுகளையும் 55 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் மொத்தமாக கைப்பற்றியுள்ளனர்.

தொற்றுநோய் அச்சம் காரணமாக கொவிட்-19 நெறிமுறைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment