இலங்கை கடற்பரப்பில் 6 படகுகளுடன் கைதான 43 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Monday, December 20, 2021

இலங்கை கடற்பரப்பில் 6 படகுகளுடன் கைதான 43 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பில் கைதான 43 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி 43 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment