நீதவானின் வீட்டில் கைவரிசையை காட்டிய திருடர்கள் : 11 பவுண் தாலிக் கொடி கொள்ளை - News View

About Us

About Us

Breaking

Saturday, December 18, 2021

நீதவானின் வீட்டில் கைவரிசையை காட்டிய திருடர்கள் : 11 பவுண் தாலிக் கொடி கொள்ளை

(கனகராசா சரவணன்)

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் நீதவான் ஒருவரின் வீட்டில் புகுந்த கொள்ளையர்களை பிடிக்க முற்பட்ட நீதவானை தாக்கிவிட்டு அவரின் மனைவியின் 11 பவுண் தாலிக் கொடியை அறுத்து எடுத்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் இன்று சனிக்கிழமை (18.12.2021) அதிகாலை 03.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவானாக கடமையாற்றி வரும் அக்கரைப்பற்று வை.எம்.சி. வீதியில் உள்ள அவரின் வீட்டில் உறக்கத்தில் இருந்தபோது சம்பவதினமான இன்று அதிகாலை 03.00 மணியளவில் உள்சென்ற இரு கொள்ளையர்கள் மனைவியின் தாலிக் கொடியை அறுத்தபோது சத்தம் கேட்டு உடன் எழுந்த நீதவான் கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டபோது அவரை தாக்கியதில் நீதவான் காயமடைந்ததையடுத்து கொள்ளையர்கள் தாலிக் கொடியுடன் தப்பி ஓடியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இந்த பகுதியில் கடந்த வாரம் இரு வீட்டில் உறக்கத்தில் இருந்த இரு பெண்களின் தாலிக் கொடிகளை கொள்ளையிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இதுவரை கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment