TNA க்கு செல்வாக்கை குறைத்த சாபக்கேடான காலம் நல்லாட்சி அரசு ஆட்சி அமைந்த ஐந்து வருடங்களே - பா. அரியநேத்திரன் - News View

About Us

About Us

Breaking

Monday, November 15, 2021

TNA க்கு செல்வாக்கை குறைத்த சாபக்கேடான காலம் நல்லாட்சி அரசு ஆட்சி அமைந்த ஐந்து வருடங்களே - பா. அரியநேத்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு செல்வாக்கை குறைத்த சாபக்கேடான காலம் நல்லாட்சி அரசு ஆட்சி அமைந்த கடந்த 2015 தொடக்கம் 2020 வரையுமான ஐந்து வருடங்கள். இது மறைக்க முடியாத உண்மை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

கடந்த 2020, பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து பத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் தெரிவானார்கள், அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பேர் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவானர்கள். இதற்கு என்ன காரணம் என ஊடகவியலாளர் கேட்டபோது அவர் மேலும் கூறுகையில், உண்மையில் இது நல்ல கேள்வி. தேர்தல் இடம்பெற்று ஒரு வருடம் கடந்து இதற்கு பதில் வழங்குவது பொருத்தமானதுதான்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு 2001 இல் உருவாக்கப்பட்டு 2001 டிசம்பர் 08 இல் இடம்பெற்ற தேர்தலில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களும் 2004 ஏப்ரல் 02 இல் இடம்பெற்ற தேர்தலில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் 2010 ஏப்ரல் 08 இல் இடம்பெற்ற தேர்தலில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களும் 2015 ஆகஸ்ட் 17 இல் இடம்பெற்ற தேர்தலில் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். 

ஆனால் இறுதியாக 2020 ஆகஸ்ட் 05 இல் இடம்பெற்ற தேர்தலில் மிக குறைந்த 10 ஆசனங்கள் மட்டுமே பெற முடிந்தது. இதற்கு பல்வேறு காரணங்களை பலர் கூறினாலும் உண்மையில் பிரதான காரணம் ஆளும் தரப்புடன் இணக்கப்பாட்டு அரசியலே எமது செல்வாக்கை குறைத்தது. 

2015, பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நல்லாட்சி அரசில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவி எடுத்தாலும் எதிர்கட்சியாக செயல்படவில்லை. 

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பெறும் நோக்கில் ஆட்சியாளருடன் இணக்கப்பாடான ஆட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயல்பட்டதால் அதை மக்கள் ஆளும் கட்சியுடன் இணைந்த ஆளும் தரப்பாகவே எம்மை பார்த்தனர். இதன் தாக்கம் தேசிய அரசில் மட்டும் நின்றுவிடவில்லை.

கிழக்கு மாகாண சபையிலும் நான்கு கட்சிகளுடன் இணைந்து இணக்கப்பாடான ஆட்சியில் 2015 தொடக்கம் 2017 வரை இரண்டு வருடங்கள் செயல்பட்டதால் சில அபிவிருத்திகள் செய்ய முடிந்தது என்றார் .

தினகரன் 

No comments:

Post a Comment