எதிர்கட்சிகள் தெரிவிப்பது போல அரசாங்கத்திற்குள் நெருக்கடி எதுவுமில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் தங்களின் மாற்றுக்கருத்துக்களை பொது வெளியில் வெளியிடும்போது சில குறைபாடுகள் ஏற்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளிற்கு அரசாங்கத்திலிருந்து வெளியேறும் எண்ணமில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உறுதியான கொள்கைகளை நிலைப்பாடுகளை பேணும் கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ள அமைச்சர், அரசாங்கத்திலிருந்து இந்த கட்சிகள் விலகி தங்களுடன் இணைந்து கொள்ளும் என எதிர்கட்சிகள் கருதினால் அது இடம்பெறாது என குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளிற்கு அரசாங்கத்திலிருந்து விலகும் அல்லது தனிமைப்படுத்தும் எண்ணமில்லை என தெரிவித்துள்ள அமைச்சர், அவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகினால் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுர திசநாயக்க, சம்பந்தன், ஹக்கீமுடன் இணையமுடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கட்சிகளின் கொள்கைகளிற்கும் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் கொள்கைகளிற்கும் இடையே மிகப்பெரும் இடைவெளி உள்ளது. எந்த கட்சியும் அரசாங்கத்திலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment