தனது நிர்வாணப் படங்களை பெண்களுக்கு அனுப்பியவர் கைது : 107 சிம் அட்டைகள் மீட்பு - News View

Breaking

Monday, November 15, 2021

தனது நிர்வாணப் படங்களை பெண்களுக்கு அனுப்பியவர் கைது : 107 சிம் அட்டைகள் மீட்பு

தனது நிர்வாண புகைப்படங்களை எடுத்து அவற்றை பெண்களின் கைத்தொலைபேசிகளுக்கு அனுப்பிய நபர் ஒருவர் நேற்று இரத்தினபுரி மாவட்ட காவத்தை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணனிப் பரிசோதனை ஆய்வுப் பிரிவின் பரிசீலனையின் பின் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் தொலைபேசி மற்றும் உடமைகள் பரிசோதிக்கப்பட்ட போது அவரிடமிருந்து பல தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட 107 சிம் கார்டுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அத்துடன் போலி மற்றும் வேறு அடையாள அட்டை பிரதிகளை பயன்படுத்தி வேறு நபர்களின் பெயர்களில் சிம் கார்டுகளைப் பெற்று அவற்றை மேற்படி குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தி வந்துள்ளமை தெரிய வந்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்ததாக பொலிசார் தெரிவித்தனர்

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

No comments:

Post a Comment