கிண்ணியா - குறிஞ்சங்கேணியில் கடற்படையின் விசேட போக்கு வரத்து சேவை ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Friday, November 26, 2021

கிண்ணியா - குறிஞ்சங்கேணியில் கடற்படையின் விசேட போக்கு வரத்து சேவை ஆரம்பம்

குறிஞ்சங்கேணி பாலத்தில் பாதுகாப்பான பயணிகள் போக்கு வரத்து சேவையை வழங்குவதற்கு இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி திருகோணமலை, கிண்ணியாவில் உள்ள குறிஞ்சங்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் முடிவடையும் வரை அப்பகுதியில் வசிப்பவர்கள் கடற்படையின் போக்கு வரத்து முறையைப் பயன்படுத்த முடியும்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக குறிஞ்சங்கேணி பாலத்தின் நிர்மாணப் பணியினால் பிரதேசவாசிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நாளாந்தம் களப்பினை கடக்க எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

அதற்கிணங்க கிழக்கு கடற்படை கட்டளையின் மேற்பார்வையின் கீழ் நவம்பர் 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடற்படையினர் ஒரே நேரத்தில் 25 பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட படகு ஒன்றை சேவையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

கடற்படையின் இந்த படகு காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையிலும் சேவையில் இருக்கும்.

No comments:

Post a Comment