நல்லதோர் எதிர்காலத்தின் தொடக்க நாளாக இத் தீபத் திருநாள் அமையும் என நான் நம்புகிறேன் : அங்கஜன் இராமநாதன் - News View

Breaking

Wednesday, November 3, 2021

நல்லதோர் எதிர்காலத்தின் தொடக்க நாளாக இத் தீபத் திருநாள் அமையும் என நான் நம்புகிறேன் : அங்கஜன் இராமநாதன்

தமிழ் மக்கள் அனைவர் வாழ்விலும் தீப ஒளி புது வசந்தத்தை ஏற்படுத்த வேண்டுமென, இன்றைய தீபாவளித் திருநாளில் வாழ்த்துகின்றேன்.

நல்லதோர் எதிர்காலத்தின் தொடக்க நாளாக இத் தீபத் திருநாள் அமையும் என நான் நம்புகிறேன். கொரோனா நோய்த் தொற்றில் இருந்து உலக மக்கள் விடுபட்டு படிப்படையாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அந்த இருளில் இருந்து மீண்டு தமிழ் மக்கள் புது விடியலை நோக்கி பயணிக்கும் நாளின் தொடக்க நாளாக இந்நாள் அமைய வேண்டும்.

தீமைகள் புரிந்த நரகாசுரனை ஆட்கொண்ட நாளாக உலகில் உள்ள இந்துக்கள் அனைவரும் தீபாவளித் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்துக்களுக்கு தீமை புரிந்த நரகாசுரனை தெய்வம் ஆட்கொண்ட இந்நாளில் கொடிய சக்திகளின் கோரப் பிடியில் இருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட்டு சுபீட்சமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வீடுகளிலும், ஆலயங்களிலும் சமயக் கிரிகைகளில் நாம் ஈடுபடுவோம்.

தமிழ் மக்களின் இல்லங்களிலும்,உள்ளங்களிலும் துன்பங்கள் நீங்கி நன்மைகள் நிறைய இத் தீபாவளிப் பண்டிகை உறுதுணையாக அமைய அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

அங்கஜன் இராமநாதன்
பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர்
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்

No comments:

Post a Comment